இலங்கையிலும் எஸ்.பி.பி. நலம்பெற பிரார்த்தனை

82

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைந்து மீண்டுவர வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள இரசிகர்கள் பிரார்த்தனை செய்துவரும் நிலையில் இலங்கையிலும் எஸ்.பி.பி. நலம்பெற பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் கலைஞர்களால் (Srilankan Tamil Artist Foundation) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

இலங்கை கலைஞர்கள் சார்பில் சந்திரசேகர், சுருதி பிரபா, எம்.சிவகுமார், டிலுக்சி, பிரேம் ஆனந்த், ஜெய பிரகாஷ் மற்றும் பல கலைஞர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதன்போது, எஸ்.பி.பாலசுப்ரமணியம் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மீண்டு வரவேண்டும் என பிரார்த்திக்கப்பட்டதுடன் விசேட பூசையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

.