கூட்டமைப்பு பதவி பற்றிய சுமந்திரனின் கருத்து…!!!

38

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு செல்வம் அடைக்கலநாதனும், கட்சியின் கொறடா பதவிக்கு தர்மலிங்கம் சித்தார்த்தனும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என அறியமுடிகின்றது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இரா.சம்பந்தன் இந்த முடிவை அறிவித்ததாக
செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எம். சுமந்திரனிடம் ஆதவன் வினவியபோது “அவ்வாறு வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை” என கூறியுள்ளார் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.