பிரான்ஸில் பாடசாலைகள் மீள் திறப்பு..!!

60

பிரான்ஸில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரத்தை அண்மித்துள்ளது.

எனினும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்று தடுப்பு மருந்து விநியோகிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இமானுவேல் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் ஜனாதிபதி இமானுவேலின் இந்த தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு அந்த நாட்டு ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.