நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சியின் பிரதி அமைப்பாளர் மற்றும் உதவி அமைப்பாளர்கள் நியமனம்..!!

62

நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சியின் பிரதி அமைப்பாளர் மற்றும் உதவி அமைப்பாளர் ஆகியோருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி ஆளுங்கட்சியின் பிரதி அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, மற்றும் ஜயந்த கெடகொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதவி அமைப்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஷ்பகுமார, மொஹமட் முஸ்ஸமில் அசங்க நவரட்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆளுங்கட்சியின் பிரதி அமைப்பாளர் மற்றும் உதவி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..