புகையிரதத்தில் மோதிய கெப் ரக வாகனம்- 7 பேர் படுகாயம்…!!!

42

தம்புத்தேகம-பாதெனிய பகுதியில் வீதிக்கு குறுக்கே அமைந்துள்ள புகையிரத கடவையை கடக்க முயன்ற கெப் ரக வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படு காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் தற்போது தம்புத்தேகம மற்றும் தலாவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர்களில் நான்கு பேர் தற்போது மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது .