மூன்றாவது டெஸ்ட்டுக்கு வலுவான நிலையில் இரண்டு அணிகள்!

34

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி, நேற்றைய ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 332 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், ஜோஸ் பட்லர் 87 ஓட்டங்களுடனும், ஸெக் கிரவ்லி 171 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், யாசிர் ஷா 2 விக்கெட்டுகளையும், ஷாயீன் அப்ரிடி மற்றும் நஸிம் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் சாய்த்தனர்.

சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 332 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில், ரொறி பர்ன்ஸ் 6 ஓட்டங்களையும், டொமினிக் சிப்ளி 22 ஓட்டங்களையும், ஜோ ரூட் 29 ஓட்டங்களையும், ஒல்லி போப் 3 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை இன்று இங்கிலாந்து அணி தொடரவுள்ளது.