யாழ் அரியாலை பகுதியில் ஆபத்தான மோட்டார் குண்டுகள் மீட்பு!

42

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இருந்து பல மோட்டார் குண்டுகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். அரியாலைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் இருப்பதை அப்பகுதில் உள்ளவர்களினால் நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் குறித்த மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர்.