ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது.

36

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “கெவுமாவின்” உதவியாளரான “தியகம மஞ்சு” என்பவரை களுத்துறை வலய குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

10.30 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர் களுத்துறை எலமோதரை பகுதியில் வைத்து இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, இதில் ஒருவர் கெவுமா என்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரின் உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது.

இவர் பன்னிபிடிய-அருவ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற 5 பில்லியன் பெறுமதியுடைய வைரம் மற்றும் மாணிக்கக்கல் கொள்ளைச் சம்பவத்துடன் தேடப்பட்டு வரும் முக்கிய சந்தேக நபர் என்பது குறிப்பிடத்தக்கது.