இந்தியாவில் புதிதாக 5 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா தொற்று…!!!

39

தமிழகத்தில் புதிதாக 5ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 73 ஆயிரமாக உயர்வடைந்து காணப்படுகின்றது.

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 23பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ததுடன்,ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்தும் காணப்படுகின்றனர்.

உயிரிழந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 6ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 24 மணி நேரத்தில், ஆயிரத்து 294 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 406பேரும் கோவையில் புதிதாக 389 பேர்,திருவள்ளூரில் மேலும் 384 பேரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்களை வெளியிட்டுள்ளது.