இன்று முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு விசேட அதிரடிப்படையினர்.

35

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வெலிக்கடை, மெகசின், கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் இன்று முதல் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கைதிகளை பார்வையிடுவத்கு வருகைதரும் உறவினர்களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை விஷேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பூஸ்ஸா மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.