சர்க்கரை நோய்க்கான தீர்வு..!!

54

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. ஆவாரம்பூவின் பூ, இலை, காய், வேர் அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது.

நீங்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுபவராயின் ஆவாரம்பூ சூப் குடியுங்க…

ஆவாரம்பூ சூப் செய்ய தேவையான பொருட்கள்…

ஆவாரம்பூ பொடி – 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்,
இஞ்சி விழுது – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
நெய் – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை….

*கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.

*பின்பு அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், ஆவாரம்பூ பொடி போட்டு வதக்கி உப்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

*கொதித்ததும் இறக்கி நெய் விட்டு, பரிமாறவும்.