கண்ணதாசன் பேரனுக்கு ஜோடியாக கை கோர்க்கும் வாணி போஜன் …!!!

85

‘தாழ் திறவா’ எனும் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக வாணி போஜன் தற்பொழுது நடிக்கிறார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இவர். அறிமுக படத்திலேயே வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. இதனால் பட வாய்ப்புகளும் குவிந்தன. தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக ஒரு படத்திலும், சூர்யா தயாரிக்கும் 2 படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், வாணி போஜன் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘தாழ் திறவா’ எனும் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார்.

பர்மன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பரணி சேகரன் இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இப்படத்தில் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது .