இங்கிலாந்து அணியை வரவேற்க தயாராகும் நிலையில் இந்தியா…!!!

101

 

எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய கிரிக்கட் சபை தலைவர் சௌரவ் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக இந்த டெஸ்ட் தொடரை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்தாண்டு செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.