நாய் கடித்து இருவர் பலி!

84

விசர் நாய் கடிக்கு இலக்கான 15 வயதான சிறுவன் ஒருவனும், 39 வயதான தாய் ஒருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – சங்கரத்தை, வட்டுக்கோட்டையை சேர்ந்த தவச்செல்வன் தர்சன் என்ற சிறுவன் சில வாரங்களுக்கு முன்னர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளான்.

எனினும் அது தொடர்பில் சிறுவன் தமது வீட்டில் தெரிவிக்கவோ தடுப்பூசி போடவோ இல்லை.இந்நிலையில் நேற்று (22) இரவு சிறுவன் பதட்டமாகவும் பயமாகவும் உள்ளது என்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

என்றும் தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளான். இதேவேளை மன்னார் – தாழ்வுப்பாட்டை சேர்ந்த ஜெபநேசன் கொன்சடியா என்ற தாய்க்கும் மகனுக்கும்

கடந்த 13ம் திகதி நாய் கடித்துள்ளது. மகனுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது. தாயார் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த 21ம் திகதி குறித்த தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

மன்னார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (22) இரவு உயிரிழந்துள்ளார்.