புதிய அரசியலமைப்பு உருவாக்கம் – நீதி அமைச்சர் அலி சப்ரி

58

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய எதிர்வரும் தினத்தில் குறித்த குழு நியமிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்துச் செய்யமுதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சரவை அனுமதி வழங்கியது.

அத்துடன் 20ஆவது அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ளவும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட 5 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை இணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.