வெற்றிலை விற்பனை மற்றும் காட்சிப்படுத்தலுக்கு முற்றாக தடை…!!!

34

புகையிலை அடங்கிய வெற்றிலை விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொது மக்கள் காணும் வகையில் புகைப்பிடித்தலும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்த அதிகாரசபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் போதைப்பொட்களை தடுப்பதற்காக, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் சட்டங்களுக்கு அமைய நடைமுறையில் உள்ள சட்டங்களை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகையிலையுடன் கூடிய வெற்றிலை விற்பனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் அந்த சட்டம் தொடர்ந்தும் சரியான முறையில் அமுலாகவில்லை.

எனினும் எதிர்காலத்தில் அது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புகையிலையுடன் கூடிய வெற்றிலை பயன்படுத்துவதால் ஏற்படும் வாய் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் மூன்று பேர் உயிரிழப்பதாகவும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.