அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – குடியரசு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் ட்ரம்ப்…!!!

55

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரை அக்கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜோ பிடனை ஜனாதிபதி வேட்பாளராக கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்ததுள்ளனர்.

அத்தோடு, துணை ஜனாதிபதி வேட்பாளராக மைக் பென்ஸ் போட்டியிடவுள்ளதாக குடியரசுக் கட்சியின் தேசிய குழு தலைவர் ரோஜாவ் மெக்டேனியல் மேலும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.