இங்கிலாந்தில் மீண்டும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சம்…!!!

55

இங்கிலாந்தில் மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப சில பெற்றோர்கள் அச்சமடைவதாக தெரிவித்துள்ளனர்.

லெய்செஸ்டர் மற்றும் லெய்செஸ்டர்ஷைர் மாணவர்கள் புதன்கிழமை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று மற்றவர்களுக்கு பரவுவது அல்லது அதிலிருந்து தீவிரமாக நோய்வாய்ப்படுவது சாத்தியமில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், நகரத்தில் உள்ள பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் ஆபத்து நேரிடலாமென அஞ்சுகின்றனர் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றது.