இந்தியாவில் கொரோனா பரிசோதனை அதிகரிப்பு…!!!

55

இந்தியாவில் கொரோனா பரிசோதனை 3.5 கோடியை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.நாள் ஒன்றுக்கு 8 இலட்சம் வரை பரிசோதனை செய்யப்படுகின்றது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 3.5 கோடி பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப் படாததால் சமூக இடைவெளி முகக் கவசம் அணிதல் பரிசோதனையை அதிகரித்து நோய் தாக்கியவர்களை உடனடியாக கண்டுபிடித்து தனிமைப்படுத்தி மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பது சிறந்த வழியாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளமை அறியப்பட்டுள்ளது.