உண்மையை வெளிப்படையாக மனம் திறந்து பேசிய சமீரா ரெட்டி …!!!

77

கறுப்பா உயரமா இருப்பதாக சொல்லி பாலிவுட் திரையுலகில் தன்னை நிராகரித்ததாக நடிகை சமீரா ரெட்டி பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை வசீகரித்தவர். சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் தற்பொழுது உள்ளனர்.

இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி, பாலிவுட் படங்களில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “நீங்க ரொம்ப கறுப்பா, உயரமாக இருக்கிறீர்கள் என்று என்னிடம் அடிக்கடி கூறினார்கள். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்திற்கு நீங்கள் செட்டாகமாட்டீர்கள் என்றார்கள். அதற்காக நான் மனம் வருந்தவில்லை. அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டு எனக்கு என்மீதான அன்பு தான் கூடியது. இது பிரித்துப் பார்ப்பதில்லை. நடிகையாக இருந்தால் இப்படித் தான் இருக்கனும்னு எதிர்பார்க்கிறார்கள்”. இவ்வாறு அவர் கூறினார். என்பதும் குறிப்பிடத்தக்கது.