நாமலின் ஒத்துழைப்புடன் சட்டத் தரணிகள் கால்பந்து கழக அணி வெற்றி…!!!

66

களனி பல்கலைகழக கால்பந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், சட்டத் தரணிகள் கால்பந்து கழக அணி வெற்றியடைந்துள்ளது.

களனி கால்பந்து வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் சட்டத் தரணிகள் கால்பந்து கழக அணி வெற்றிபெற்றது.

கடினமான வேலைப்பளுவுடனும் இப்போட்டியில், சட்டத் தரணிகள் கால்பந்து கழக அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ இப்போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

இதற்காக தற்போது சமூகவலைதளங்களின் ஊடாக அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

2017ஆம் ஆண்டு முதல் சட்டத் தரணிகள் கால்பந்து கழக அணியில் விளையாடிவரும் நமல் ராஜபக்ஷ, 2017ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற சட்டத் தரணிகள் ஆசிய கால்பந்து கிண்ண தொடரில் பங்கேற்றார்.

இது பார்சிலோனாவில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டு சட்டத் தரணிகள் கால்பந்து உலகக் கிண்ண தொடரில் பங்கேற்க இலங்கை சட்டத் தரணிகள் அணிக்கு மிகவும் உதவியது.

அத்துடன், சட்டத் தரணிகள் ஆசிய கால்பந்து கிண்ண தொடரின் 2019ஆம் ஆண்டு பதிப்பில் மீண்டும் பங்கேற்க முடிந்தது.

அங்கு சிறப்பாக செயற்பட்டதால், சட்டத் தரணிகள் அணி, போர்த்துக்கல்லில் நடைபெறவுள்ள சட்டத் தரணிகளுக்கான 2021ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற முடிந்தது.

உலகத்தரம் வாய்ந்த அணிகளுடன் போட்டியிட தொடர்ச்சியான பயிற்சி தேவை என்பதால், தற்போது சட்டத் தரணிகள் அணி கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.