சிறையில் 3 கைதிகள் தற்கொலை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

85

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக சிறைச் சாலைகளுக்கு போதைப்பொருள் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த வாரத்தில் மூன்று கைதிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் வருவது தடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் சிறைக் கைதிகள் சிலர் மந்தமாக இருந்ததாகவும் கடந்த வாரத்தில் அவர்களுள் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஷேடமாக சிறைச்சாலைகளின் வெளியில் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிறைச்சாலையின் உள்நுழையும் அதிகாரிகள், சிறை கைதிகளை சோதனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.