பிரித்தானியா மருத்துவமனைகளில் கொவிட்-19 தொற்று ஏற்பட வாய்ப்பு…!!!

53

பிரித்தானியாவில் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

கிங்ஸ் கல்லூரி லண்டன் மேற்கொண்ட ஆய்வில், இத்தாலி அடங்களாக 10 பிரித்தானிய மருத்துவமனை தளங்களில் சிகிச்சை பெற்ற எட்டு நோயாளிகளில் ஒருவருக்காவது வைரஸ் தொற்று பரவுவது உறுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28ஆம் முதல் 1,500 தொற்றுகளின் தரவை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர். இது பிரித்தானியாவின் உச்சத்தை காண்பித்தது.

குறித்து டாக்டர் பென் கார்ட்டர் கூறுகையில் இந்த நோயாளிகளில் பெரும்பாலோர் ஏற்கனவே நீண்ட காலமாக மருத்துவமனையில் இருந்தனர் எனவும் அவர்கள் வயதானவர்கள், பலவீனமானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.