மகாராஷ்டிரா கட்டட விபத்து:30 பேர் சிக்குண்டிருக்கலாம் என அச்சம்…!!!

56

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் இடம்பெற்ற கட்டட விபத்தில் சிக்குண்டுள்ள 30 பேரை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

ராய்காட் மாவட்டத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டட தொகுதியொன்று நேற்று (திங்கட்கிழமை) இடிந்து விழுந்தது.

இதில் சிக்குண்டிருந்த 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருக்கலாம் என குறிப்பிட படுகின்றது.

குறித்த இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மீட்பு பணிகள் மேலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய மீட்பு படையினர் கூறுகின்றனர்.

இந்த விபத்து மேலும் விசாரணைகள் நடத்தி வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.