முகப்பொலிவை பெற்றுத்தரும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்..!!

75

பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை வேறு பலவகைகளிலும் பெண்கள் உபயோகிக்கலாம்.

பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற லிப்ஸ்டிக்குகளை விட சிவப்பு நிற லிப்ஸ்டிக் எல்லோருக்கும் பொருத்தமானது. தனித்துவமான முகப்பொலிவை பெற்றுத்தரும்.

லிப்ஸ்டிக்கை லிப் பாமாகவும் மாற்றி உபயோகிக்கலாம். தொடர்ந்து சிவப்பு லிப்ஸ்டிக்கை உபயோகித்து சலிப்படைந்தால் அதனை கொண்டு லிப் பாம் தயார் செய்யலாம். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கோகோ வெண்ணெய் ஊற்றிவிட்டு அதனுடன் சிறிதளவு லிப்ஸ்டிக் சேர்த்து பிசையவும். அதனை மைக்ரோ ஓவனில் ஒரு நிமிடம் வைத்துவிட்டு வெளியே எடுக்கவும். அது ஆறியதும் வேறொரு கிண்ணத்தில் மாற்றிவிடவும். இதனை உதட்டில் பூசலாம்.

லிப்ஸ்டிக் மினுமினுப்பையும் தரக்கூடியது. கன்னங்களுக்கு இயற்கையான பிரகாசமான நிறத்தையும் கொடுக்கும். முதலில் கன்னங்களில் வெளிர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை லேசாக தடவி விரல்களால் மசாஜ் செய்யவும். பின்னர் ஒப்பனை தூரிகையை கொண்டு தேய்க்கவும். அதனுடன் சிறிதளவு ‘பிக்ஸிங் பவுடரும்’ சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

‘ஐ ஷேடோ’வாகவும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். சிறிதளவு சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை கைவிரலிலோ, ஒப்பனை தூரிகையிலோ தடவி கண்களை சுற்றி தேய்த்துவிடலாம். அதனுடன் ‘ஹைலைட்டரை’யும் பயன்படுத்துவது கூடுதல் பொலிவை தரும்.