ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஜெயம்ரவி…!!!

75

முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய பிறந்தநாளை செப்டம்பர் 10-ஆம் தேதி விமர்சையாக கொண்டாட இருக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், என் அன்பிற்கினிய ரசிகர்களே, இன்னும் ஒருசில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை அடைகிறேன் . உங்கள் அன்பு ஒன்றுமட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளை மிக சிறப்படையச் செய்கிறது.

ஆனால் இந்த வருடம் உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். கொண்டாட்டங்களையும் கூட்டமாய்ச் சேர்வதையும் தவிர்த்துவிடுங்கள். நம்மையும் நம்மைச்சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை. கொண்டாட்டங்களுக்கு பதிலாக நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறேனோ அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த தொற்றை எதிர்த்துப்போராடி வெற்றிபெறுவோம். இவ்வாறு அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.