வடக்கில் ரயில் சேவைகள் பாதிப்பு!

38

வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலேயே ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுச் சென்ற ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால் குறித்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த ரயில் பாதையினைச் சீரமைக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.