அடகு கடையில் நகை கொள்ளை!

58

இரத்மலானை – பெலெக்கடே சந்தியில் உள்ள தங்க ஆபரணங்களை அடகு வைக்கும் நிறுவனம் ஒன்றில் கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிறுவனத்தில் இரண்டு கோடி ரூபாய்க்கும அதிக பெறுமதி கொண்ட தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தங்க ஆபரண அடகு வைக்கும் நிறுவனத்தில் நேற்றைய தினம் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பணியாளர்களினால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.