“அருளாளர் அன்னை தெரசா”வின் பிறந்த தினம் இன்று..!!

71

அன்னை தெரசா அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் 1910ம் ஆண்டு அகஸ்டு மாதம் 26ம் திகதி பிறந்தார். இவர் இந்திய குடியுரிமை பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவரின் இயற்பெயர் “ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ” ஆகும்.

இவர் “அமைதிக்கான நோபல் பரிசினையும்”, இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான “பாரத ரத்னா” விருதினையும் பெற்றார். முதலில் இந்தியா முழுவதும் “பிறர் அன்பின் பணியாளர் சபை”யினை நிறுவினார். பின்னாளில் அவரது இறப்பின் போது “பிறர் அன்பின் பணியாளர் சபை”  123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது.

பலர் இவரை புகழ்ந்து வந்தாலும், பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்தார். இவர்கள் அன்னை தெரசாவின் உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் எனவும் குற்றம்சாட்டினர்.

இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரசா என்று பட்டம் சூட்டப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.