ஆவி பிடித்தால் குணமாகும் நோய்கள்..!!

65

பல விதமான நோய்த்தொற்றுகளையும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்தே தடுக்க முடியும்.

ஆவிபிடித்தல் சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. தீவிரமான சளி மற்றும் இருமல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள் 100ml தண்ணீரில் நான்கு பல் தோல் உரித்த அல்லது உரிக்காத, பூண்டைச் சேர்த்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றைக் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஆவிபிடிக்கவும். இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை நீங்கி சுவாசப்பாதை சீராகும்.

பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கொண்டு தயாராகும் நீரை ஆவிபிடிக்கும்போது நுரையீரலில் உள்ள நோய்த்தொற்றுகள் அழிக்கப்படும். இதை நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை எனச் சில நாள்கள் தொடர்ந்து ஆவிபிடிப்பது சிறந்தது. கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக நுரையீரல் கருதப்படும் நிலையில், இந்த முறையில் ஆவிபிடிப்பது நல்ல பயனளிக்கும்.