ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் முடிவு எட்டப்படாமலே நிறைவு

58

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் தேசிய பட்டியல் ஆசனம் அல்லது கட்சி தலைமை குறித்து ஒரு முடிவும் எட்டப்படாமலே நிறைவு பெற்றுள்ளது.

தற்போதைய கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று செவ்வாய்க்கிழமை கூடியது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் தொடர்பான முடிவும், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கட்சியின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தமை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்தது.

இருப்பினும் எவ்வித முடிவும் எட்டப்படாமலேயே கட்சியின் செயற்குழுக்க கூட்டம் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.