ஒரேநாளில் 66ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று…!!!

58

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று ஒரேநாளில் 66 ஆயிரத்து 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 66 பேர் உயிரிழந்து காணப்படுகின்றனர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 32 இலட்சத்து 31 ஆயிரத்து கடந்துள்ளதுடன், உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்து காணப்படுகின்றது.

24 இலட்சத்து 64 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 7 இலட்சத்து 4 ஆயிரம் பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.