கிரிஸ் கெய்லுக்கு கொரோனா தொற்றா?….!!

57

மேற்கிந்திய கிரிக்கட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்லுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் சம்பியனான உசைன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்குபற்றியிருந்த கிறிஸ் கெய்ல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.