கும்ப்ளே பற்றி கேப்டன் கே.எல் ராகுலின் கருத்து..!!

69

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ம் திகதி தொடங்குகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் உள்ளார். முதன்முறையாக அவர் கேப்டன் பதவியை ஏற்றுள்ளார். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே உள்ளார்.

இதுகுறித்து கே.எல் ராகுல் கூறுகையில் ‘‘அனில் கும்ப்ளே போன்ற ஒருவர் அருகில் இருந்து எனக்கு உதவும்போது இந்த சீசன் மகத்தானதாக இருக்கும். நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவருடன் கிரிக்கெட்டிற்கு வெளியேயும் சிறந்த அளவில் நட்பு வைத்துள்ளேன்.

அனில் கும்ப்ளே எனது கேப்டன் பதவியை மிகவும் எளிமையாக்கிவிடுவார் என்று நினைக்கிறேன். பெரும்பாலான திட்டங்கனை அவர் வகுத்து விடுவார். நான் மைதானம் சென்று அந்த திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர் எங்கள் அணிக்கு தேவை என்பதால் ஆக்சனில் மிகவும் தெளிவாக இருப்போம்” என்று கூறியமையும் குறிப்பிடத்தக்கது.