கூரைத் தளம் விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி.

37

யாழ். சுன்னாகம் – அம்பனைப் பகுதியில் வீடு திருத்தவேளையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் நவாலி கலையரசி வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.