கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்த முதல்கட்ட பரிசோதனை பிரித்தானியா…!!!

64

இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யா சீனா அமெரிக்கா இங்கிலாந்து இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் காணப்படுகின்றன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

ஒக்ஸ்போர்டு தடுப்பூசி உள்ளிட்டவை கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் முயற்சில் நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனையை ஆரம்பித்துள்ளது. இந்த பரிசோதனைக்காக 18 முதல் 55 வயது வரை உள்ள 48 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

7 ஆயிரத்து 442 கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி பரிசோதனையில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்க முடியும் பட்சத்தில் அடுத்த இரண்டு கட்ட பரிசோதனைகளும் துரிதப்படுத்தப்படும் என மேலும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.