சீயோலிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூட உத்தரவு..!!!

70

தென்கொரியா தலைநகர் சீயோலில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளமையினைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீயோல் நகரில் கடந்த 2 வாரங்களில் 200 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சீயோலில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது மேலும் இணைய வழி மூலமாக கற்கை நெறிகள் எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என தென்கொரிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.