ஜனாதிபதி முன்னிலையில் இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவியேற்பு…!!!

50

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தில் 28 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கடந்த 12 ஆம் திகதி புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரும் மட்டுமே கண்டியில் பதவியேற்றிருந்தனர்.

இந்நிலையில் தற்போது சுசில் பிரேமஜயந்தவுடன் சேர்த்து 40 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.