நாடாளுமன்றத்தின் பார்வைக்கூடத்திற்கு மீள் அறிவித்தல் வரை பூட்டு.

58

நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வைக்கூடம் மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், நாடாளுமன்ற பொதுமக்கள் பார்வைக்கூடம் திறக்கப்படும் தினம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்போது பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன், பதவிப் பிரமாணம் செய்துகொண்ட உறுப்பினர்களின் உறவினர்கள் பொதுமக்கள் பார்வைக்கூடத்தில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.