நினைவாற்றலை தியானம் மேம்படுத்தும்..!!

51

நிறைய பேரிடம் நினைவுத்திறன் குறைபாடு இருக்கிறது. இயற்கையாகவே நினைவுத்திறனை அதிகரிப்பதற்கு சில ஆயுர்வேத நடைமுறைகள் இருக்கின்றன.

தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்தால் நினைவுத்திறனும், மனநிலையும் மேம்படும். தேர்வு சமயத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் பலர். அவர்களுக்கு தியானம் பலன் கொடுக்கும்.

மூளைக்கு எளிமையான பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்க செய்யலாம். வழக்கமாக வலது கைதான் அதிகமாக வேலை செய்து கொண்டிருக்கும். அதற்கு மாற்றாக இடது கையை பயன்படுத்தலாம். அதன் மூலம் மூளையின் ஆற்றல் மேம்படும்.

இரத்த ஓட்டம் எப்போதும் சீராக இருக்க வேண்டும். மூளைக்கு போதுமான அளவு இரத்தம் சென்றால் மட்டுமே நினைவாற்றல் அதிகரிக்கும்.

கட்டுப்பாடற்ற உணவு பழக்கம், மூளை மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதனால் சரியான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிராக்கோலி, மீன்கள், பூசணி விதைகள், அக்ரூட் பருப்புகள், மஞ்சள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.