புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக ரியான் ஹாரிஸ்..!!

58

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரியான் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் விலகியுள்ள நிலையில் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ரியான் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ரியான் ஹாரிஸ்க்கு பயிற்சியாளராக நல்ல அனுபவம் உள்ளது.

பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் பயிற்சியாளராக இருந்துள்ளார். அதன்பின் தேசிய அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

டி20-யில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். கடந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.