புல்வாமா தாக்குதல் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்…!!!

47

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ள நிலையில் இது தொடர்பிலான குற்றப்பத்திரிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சுமார் 13 ஆயிரத்து 500 பக்கங்களை கொண்ட குறித்த குற்றப்பத்திரிக்கையில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ.முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் உள்ளிட்ட 19 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிகாரி ஒருவர் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை யார் நடத்தினார்கள் எதற்காக நடத்தப்பட்டது என்பதற்கான எந்தவொரு தடயமும் முதலில் கிடைக்கவில்லை

முதலில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பல துண்டுகளாக சிதறியிருந்ததால் அந்தக் காரின் உரிமையாளர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது மிகுந்த சவாலாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்ட சி.பி.ஆர்.எஃப் வீரர்கள் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடப்பட்டது.