மட்டக்களப்பு பாடசாலை மாணவன் கொலை வழக்கு விசாரணையில் அதிர்ச்சி சம்பவம்!

78

பாடசாலை ஒன்றில் தாம் தாக்கப்பட்டமைக்கு நியாயம் கோரி தமது உறவினருடன் குறித்த 15 வயதான இளைஞர் தாக்கியவர்களை சந்திக்க சென்றிருந்த வேளையில், அவர் வாளால் வெட்டி கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தசம்பவத்தில் குறித்த சிறுவனின் உறவினர்கள் இருவரும் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக ஏறாவூர் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நேற்றையதினம் 3 பேரும், நேற்று முன்தினம் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் 19 முதல் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று காவற்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது.