மெஸ்ஸி பார்சிலோனா அணியிலிருந்து விலக தீர்மானம்..!!

57

நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடரில் மெஸ்ஸி தலைமையில் களமிறங்கிய பார்சிலோனா அணி காலிறுதிப் போட்டியில் பேயர்ன் முனிச்சிடம் 8 இற்கு 2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள கொரோனா பரிசோதனைக்கு தான் வரப்போவதில்லை எனவும், அணியிலிருந்து உடனடியாக விலக விரும்புவதாகவும் பார்சிலோனா அணி நிர்வாகத்திடம், மெஸ்ஸி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெஸ்ஸி தனது 13ஆவது வயதிலிருந்து பார்சிலோனா அணியில் விளையாடி வருகின்றார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.