ஹட்டனில் வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு : சந்தேக நபர் கண்காணிப்பு கமரா மூலம் கைது.

75

ஹட்டன் – திக்ஓய நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலை கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர், ஹட்டன் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையதில் நுழைந்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தொகை, தொலைபேசி மீள் நிரப்பு அட்டை, சிக்கரட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகாப்பு கெமரா மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.