139 ஆண்டுகள் பழமையான மசூதியில் பாரிய தீ விபத்து…!!!

43

தென்னாபிரிக்காவின் டர்பனில் 139 ஆண்டுகள் பழமையான மசூதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான கிரே ஸ்ட்ரீடில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

எனினும் மசூதிக்கு மேலே அமைந்துள்ள ஊழியர்களின் குடியிருப்புகளில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீப் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தென்னாபிரக்க முஸ்லிம் வலையமைப்பின் தலைவர் பைசல் சுலிமான் தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக மேலும் தகவல்கள் அறியப்பட்டுள்ளது.

மசூதியை அண்மித்துள்ள மூன்று கட்டடங்கள் தீ விபத்தினால் சேதமடைந்ததாக அந்நாட்டு சேவை செய்தித் தொடர்பாளர் ரொபர்ட் மெக்கென்சி கூறியுள்ளார்.