அமெரிக்கா 24 சீன நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது…!!!

56

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் செயற்கைத் தீவுகளை உருவாக்கிய 24 சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

இது குறித்து அமெரிக்கா உள்துறை அமைச்சர் மைக் பொம்பியோ விடுத்துள்ள அறிக்கையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தென்சீனக் கடலில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை சீனா அகழ்வாராய்ச்சி செய்து வருவதாகத் கூறியுள்ளார்.

இத்தகைய போக்கு பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ள அவர் செயற்கைத் தீவுகளை உருவாக்கியதன் மூலம் சீனா சுற்றுச்சூழலுக்கு பெரும் கேட்டினை விளைவித்து விட்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.