இராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது…!!!

54

இராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் இரண்டாவது பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்து வருவதாக தகவல் அறியப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருட இறுதியில் இந்த பட்டியல் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உலக தரத்திலான ஆயுதங்களை வழங்கக் கூடிய இந்திய நிறுவனங்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 9 ஆம் திதகி 101 வகையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டமை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.