உறுதிபடுத்தப்பட்டது சாதாரண யானையே..!!

70

நாட்டில் வெள்ளை யானை இருக்கும் வகையிலான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிய நிலையில் அது சாதாரண நிற யானையே என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாதுருஒயா தேசிய பூங்காவில் நேற்று மாலை வன விலங்கு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றின்போது இவ் விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது

நாட்டில் வெள்ளை யானை இருக்கும் வகையிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

குறித்த யானை மாதுருஒயா தேசிய பூங்காவில் சுற்றித் திரிவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது.

எவ்வாறாயினும் குறித்த பூங்காவில் வெள்ளை யானை ஒன்று காணப்படுவது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என பூங்காவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.