உலகம் முழுவதும் கட்சியின் கிளைகளை அமைக்கவுள்ளேன்- கருணா..!!

54

தமது கட்சியின் கிளைகளை உலகம் முழுவதும் அமைக்கவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுடன் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,

அவர் “அம்பாறை மாவட்டத்தில் பாரிய சவால் எதிர்காலத்தில் எனக்கு இருக்கின்றது. நான் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்லவில்லை என நினைக்க வேண்டாம். நான் வெற்றி பெற்றுள்ளேன். எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளைப் பெற்றே சம்பந்தன் உள்ளிட்டோர் நாடாளுமன்றம் சென்றுள்ளனர்.

இதற்காக தொடர்ந்து உழைத்த புலம்பெயர் வாழ் சொந்தங்கள், இளைஞர்கள் இந்த வெற்றிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர்.

வடக்கு கிழக்கு மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை தூக்கி வீசியிருக்கிறார்கள். இதனை மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தும் முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளேன். அத்துடன் எமது கட்சியின் கிளைகளை அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நிறுவ ஏற்பாடு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.